நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : கூலி தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த மணமேடு எம்.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் கனகராஜி 62; கூலி தொழிலாளி. இவருக்கு, வளர்மதி 47; என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். வலிப்பு நோயாளியான, கனகராஜ் மது குடித்து வந்தார். இதனால், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி வெளியே சென்ற கனகராஜி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனிடையே, அவர், அங்கு, பராமரிப்பின்றி உள்ள ஒரு பொது கழிப்பிடத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அவரது மனைவி வளர்மதி அளித்த புகாரின் பேரில், கரையாம்புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

