/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டுமான நல வாரியம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான நல வாரியம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுமான நல வாரியம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுமான நல வாரியம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 16, 2025 05:42 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தட்டாஞ்சாவடி கட்டட கட்டுமான நல வாரியம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் தீர்த்தமலை தலைமை தாங்கினார். ஆலோசகர்கள் கனகசபை, பொது செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பெரியான், துணை தலைவர் அண்ணாதுரை, கூடுதல் செயலாளர்கள் ஏழுமலை, சரவணசாமி கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தின்போது மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து கொண்டுவரப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே இருந்த சட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், வீட்டு வேலை, பொது வளங்களில் பணியாற்றுவோர், விவசாய தொழிலாளர்கள், இல்லங்களில் இருந்து பணிபுரிபவர் தவிர பொதுவான அமைப்பு சாரா தொழிலாளர்கள் என 5 புதிய மத்திய சட்டங்களை இயற்ற வேண்டும்.
ஓய்வூதியமாக புதுச்சேரியில் பதிவு பெற்ற கட்டட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

