/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விளக்க கூட்டம்
/
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விளக்க கூட்டம்
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விளக்க கூட்டம்
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விளக்க கூட்டம்
ADDED : பிப் 04, 2025 05:56 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது.
புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நடத்த கூட்டத்திற்கு, கூட்டமைப்பின் தலைவர் சுமதி தலைமை தாங்கினார். தேசிய துணை தலைவர் சாமி முன்னிலை வகித்தார். பீம்சேனா பொதுச்செயலர் பகிரதன் வரவேற்றார்.
கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு பேசுகையில், புதுச்சேரி அரசு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது. அமைப்புசாரா நல வாரியத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. இந்த அரசு தொழிலாளர் விரோத அரசாக செயல்படுகிறது என்றார்.
கூட்டத்தில், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தேசிய காப்பீடு சட்டத்தை விரிவுபடுத்தும் விதத்தில், மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். அனைத்து தொழிலுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 22 ஆயிரம் வழங்க வேண்டும்.
அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்திற்கு அதிக நிதி ஒதுக்கி, நலவாரியமாக நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஏ.ஐ.டி.யு.சி., தினேஷ்பொன்னையா, அடைக்கலம், புருஷோத்தமன், விஜயா, மஞ்சுளா, அய்யனார், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கயல்விழி நன்றி கூறினார்.

