/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைவினை கலைஞர்களின் செயல் விளக்க பயிற்சி பட்டறை
/
கைவினை கலைஞர்களின் செயல் விளக்க பயிற்சி பட்டறை
ADDED : பிப் 08, 2025 06:10 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், மத்திய அரசின் சிறு, குறு மற்றும் சிறு தொழில் அமைச்சகம், புதுச்சேரி அரசு தொழில்கள் மற்றும் வர்த்தக துறை சார்பில், பிரதமரின் விஸ்வகர்மா கைவினைப் பொருட்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி கடந்த 31ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
வரும் 13ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் தச்சர், பொற்கொல்லர், சிற்பி, செருப்பு தயாரிப்பாளர், பொம்மை தயாரிப்பாளர், குயவர், கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிப்பெட்டி தயாரிப்பாளர்கள், தோல் மற்றும் பனை ஓலை, காகித கூழாலான கைவினைப் பொருட்கள், பின்னல் விளக்கு தயாரிப்பு, மெழுகு தயாரிப்பு மற்றும் பல்வேறு வகையான கைவினை பொருட்கள் காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதில் உற்பத்தியாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், அக்கலை பற்றிய விபரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கைவினைக் கலைஞர்களின் நேரடி செயல் விளக்க பயிற்சி பட்டறைகள், தினமும் மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை நடந்து வருகிறது.
அதன்படி, இன்று (8ம் தேதி) திருக்கனுார் காகித கூழ் பொம்மைத் தயாரிப்பு, 9ம் தேதி அணிகலன்கள் தயாரிப்பு பயிற்சிகள் நடக்கிறது.
மேலும், தகவல்கள் மற்றும் முன்பதிவிற்கு 74484 94440 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.