sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஆவண பராமரிப்பு குறித்த பயிலரங்கம்

/

 ஆவண பராமரிப்பு குறித்த பயிலரங்கம்

 ஆவண பராமரிப்பு குறித்த பயிலரங்கம்

 ஆவண பராமரிப்பு குறித்த பயிலரங்கம்


ADDED : நவ 14, 2025 01:51 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி ஜீவானந்தபுரம் தேசிய ஆவணகாப்பகத்தில் ஆவணபராமரிப்பு குறித்த பயிலரங்கம் நடந்தது.

பயிலரங்கை டில்லி ஆவணகாப்பக தலைமை அலுவலக அதிகாரி ஜெனா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில், ஆவண அதிகாரிகளின் கடமைகள், பராமரிப்பின் நுணுக்கங்கள், அதன் செயல்முறை குறித்து டில்லி தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் ஜெனா, உதயசங்கர், திங்கணம் சஞ்சீவ், புதுச்சேரி ஆவணக் காப்பக உதவி இயக்குனர் முருகேசன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.

1979ம் ஆண்டு புதுச்சேரியில் தேசிய ஆவணக் காப்பகம் ஏற்படுத்தப்பட்டு, லாஸ்பேட்டையில் இயங்கி வருகிறது.இங்கு பழமையான பிரஞ்சு ஆவணங்கள், பழைய வரலாற்று ஆவணங்கள், தென் இந்தியாவில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலிருந்து பெறப்படும் ஆவணங்கள், தனியார் ஆவணங்கள் அனைத்தும் விஞ்ஞானப் பூர்வ முறையில் பொக்கிஷமாகப் பாதுக்காக்கப்பட்டு வருகின்றன.

இதில் பிரஞ்சு கம்பெனியின் வாணிப நடவடிக்கைகள் முதல் அரசைக் கைப்பற்றியது வரை உள்ளது. திப்புசுல் தான், ைஹதர் அலி மற்றும் டியூப்ளே உள்ளிட்ட பிரஞ்சுப் படை அதிகாரிகளின் கடிதப் போக்குவரத்து, ஆங்கிலேயர்களுடன் மோதல் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் தெளிவாக காட்டும் வரைபடங்கள், திட்டங்கள்,நீதிமன்றத்தின் முன் வந்த வழக்குகள், அதற்கான தீர்ப்புகள் அடங்கிய ஆவணங்கள்,பிறப்பு, இறப்பு, திருமணம், ஞானஸ்நானம் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள்முக்கிய ஆவணங்களாக பாதுகாக்கப்பட்டு வருவதாக ஆவணக் காப்பக உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்தார். இப்பயிலரங்கம் கடந்த 12ம் தேதி துவங்கி, இன்று 14ம் தேதி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us