/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 28, 2024 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, புதுச்சேரி விவேகானந்தா செவிலியர் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி விவேகனாந்தா செவிலியர் கல்லுாரி மாணவர்கள் மற்றும் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், ரெட் ரிப்பன் கிளப் ஆகியன இணைந்து உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தின.
ஊர்வலத்தை விவேகானந்தா கல்வி குழும தலைவர் பத்மா தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் பரணி வரவேற்றார்.
'சரியான பாதையில் செல்லுங்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கல்லுாரி துணை முதல்வர் விருதாசாரணி நன்றி கூறினார்.

