/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக திரைப்படத் திருவிழா புதுச்சேரியில் துவங்கியது
/
உலக திரைப்படத் திருவிழா புதுச்சேரியில் துவங்கியது
ADDED : ஆக 09, 2025 07:29 AM

புதுச்சேரி: புதுச்சேரி திரை இயக்கம், அலையன்ஸ் பிரான்சிஸ் , முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், 2வது 'உலகத் திரைப்படத் திருவிழா - 2025' துவக்க விழா புதுச்சேரியில் நே ற்று துவங்கியது.
புதுச்சேரி, அலையன்ஸ் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவை 600க்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராகவும், 9 தேசிய விருதுகளையும் பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
விழாவில், அலைன்ஸ்பிரான்சிஸ் தலைவர் நல்லாம் சதீஷ், இயக்குநர்கள் லாரன்ட் ஜெரிகஸ், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 3 நாட்கள் நடக்கும் உலகத் திரைப்படத் திருவிழாவில் தொடக்க திரைப்படமாக டோரி அண்ட் லோகிடா பெல்ஜிய- பிரெஞ்சு டிராமா சினிமா திரையிடப்பட்டது.
இன்று (9ம் தேதி) காலை 9:15 மணிக்கு ஸ்பெயின் சினிமாபடம் ஆப்டர்நுான் ஆப் சாலிடியூட் திரையிடப்படுகிறது. பகல் 12:00 மணிக்கு திரைப்படங்களின் எதிர்காலம் தலைப்பில் எடிட்டர் ஸ்ரீகார் பிரசாத், இயக்குநர் சிவக்குமார் பங்கேற்கும் கலந்துரை யா டல் நடக்கிறது.
மதியம் 2:30 மணிக்கு லிவ்விங் திரைப்படம், மாலை 4:45 மணிக்கு ஈரான் சினிமா மை பேவ்ரைட் கேக், மாலை 6:45 மணிக்கு தமிழ் சினிமா 'மனிதர்கள்' திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
தொடர்ந்து மனிதர்கள் சினிமாவை உருவாக்கிய திரைக்கலைஞர்களுடன் பார்வையாளர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நடக்கிறது.
இறுதி நாளான நாளை (10ம் தேதி) காலை 9:00 மணிக்கு இரண்டு நாட்கள் திரையிடப்பட்ட சினிமாக்கள் குறித்த கருத்துப்பதிவுகள் நடக்கிறது. 9:30 மணிக்கு அர்ஜென்டினா சினிமா தி டெலின்க்வென்ட்ஸ், மதியம் 2:15 மனிக்கு அமெரிக்க சினிமா ஏ கம்ப்ளீட் அன்நோன் திரையிடப்படவுள்ளது.
மாலை 5:00 மணிக்கு நிறைவு விழா நிகழ்வுகளுக்குப் பின், இந்தி சினிமா சிஸ்டர் மிட்நைட் திரையிடப்பட உள்ளது.