ADDED : ஆக 20, 2026 04:23 PM
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விவேகானந்தா பள்ளியில் உலக கொசுக்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் முனுசாமி தலைமையில், உதவியாளர்கள் கோபி, வேல்முருகசாமி, ஜெயஸ்ரீ, ராஜவேல், ஜவகர் ஆகியோர் மாணவர்களுக்கு கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
மேலும், கொசுக்களின் வகைகள், அவற்றின் இனப்பெருக்கம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள் மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் அவசியம் குறித்தும், வீடுகள் மற்றும் பள்ளி வளாகத்தில் தேவையற்ற தண்ணீர் தேக்கங்களை அகற்றுதல், சுற்றுப் புறத்தைத் துாய்மையாக வைத்திருத்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் விவேகானந்தா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
