ADDED : ஜூலை 19, 2025 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உலக முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
புதுச்சேரி, பாரதி வீதியில் உலக முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

