தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக மருந்தாளுநர் தினம் ஜிப்மரில் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக மருந்தாளுநர் தினம் ஜிப்மரில் விழிப்புணர்வு ஊர்வலம்

உலக மருந்தாளுநர் தினம் ஜிப்மரில் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 27, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிப்மர் மருந்தியல் துறை மற்றும் மருந்தாளுநர்கள் சங்கம் சார்பில், ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மருந்தாளுநர்களை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளில் உலக மருந்தாளுநர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் சாகா வினோத் குமார் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் மருந்தியல் துறை முன்னாள் பேராசிரியர் ஷேவடே மற்றும் மருந்தகப் பொறுப்பு அதிகாரி  கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும் நோய் தடுப்பு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் மருந்துகளை முறையாகப் பயன்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

ஜிப்மரின் பல்வேறு மருந்தகங்களில் நோயாளிகளை மையமாக கொண்ட ஆலோசனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சூப்பர் ஸ்பெஷாலிட்டி  மருந்தகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், மருந்துகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் நாட்பட்ட நோய்களை நிர்வகிப்பதில் மருந்தாளுநர்களின் பங்கு குறித்து விளக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டன. மருந்தியல் துறை பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவக் கண்காணிப்பாளர் சாகா வினோத் குமார் பரிசுகளை வழங்கினார்.

மருத்துவத் துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் சிறப்புரையாற்றினார். மருந்தாளுநர்கள் குணவேல், மருந்தாளுநர் ஸ்மினு அன்னா சன்னி, சாமிவேல், டாக்டர் மிருணாளினி, சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us