ADDED : செப் 27, 2026 07:43 PM
புதுச்சேரி: சிட்டி பஞ்சாபி தாபா உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
உப்பளம், அம்பேத்கர் சாலை, ரயில்வே கேட் அருகே ‘சிட்டி பஞ்சாபி தாபா’ உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று உணவகத்தின் மேல் கூரையில் இருந்து மழைநீர் வெளியேறும் வகையில் இரும்பு ஷீட் அமைக்கும் பணி நடந்தது. மதியம் 12:00 மணிக்கு இரும்பு ஷீட்டிற்கு வெல்டிங் வைத்தபோது, தீ பொறி பரவி திடீரென மேல்கூரை தீ பிடித்து எரிந்தது. இதைகண்ட தாபாவில் உணவக அருந்தி கொண்டிருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.
தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி சுகுமாரன் தலைமையில் வீரர்கள் மூன்று வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும், தாபா உணவகத்தின் இருந்த 10க்கும் மேற்பட்ட மின் விசிறிகள், மேல்கூரை முழுதும் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
