தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக தண்ணீர் நாள் விழா  

 உலக தண்ணீர் நாள் விழா  

 உலக தண்ணீர் நாள் விழா  


ADDED : மார் 25, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 11:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில் ஏம்பலம் அடுத்த தென்னம்பாக்கம் அழகர் கோவில் வளாகத்தில், உலக காடுகள் நாள் மற்றும் உலக தண்ணீர் நாள் விழா கொண்டாடப்பட்டது.

சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மண்டல அமைப்பாளர் ஆனந்தன் வரவேற்றார். ஆலோசகர்கள் வரலாற்று விரிவுரையாளர் முத்துஐயாசாமி, ஆசிரியர் தனராஜா முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர்கள் விஜயலட்சுமி, காவலர் கணபதி ஆகியோர் நோக்கவுரையாற்றினார்.

மண்டல அமைப்பாளர் வேலாயுதம், மாணவிகள் பிரியங்கா, ராஜஸ்ரீ, பூரணி, சிவரஞ்சனி, காடுகளின் அவசியம் குறித்து கருத்துரையாற்றினர். மாணவிகள் வர்ஷா, பிரீத்தி, ஞானஸ்ரீ, ஹரிணி ஆகியோர் தண்ணீர் பாதுகாப்பு குறித்துப் பேசினர். அழகர் கோவில் வளாகத்தில் கிடந்த நெகிழிப் பொருட்கள் சேகரிப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை மாணவிகள் தமிழ்மொழி, அனுஷ்கா, அபிராமி, பூஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர். கலைமாமணி ராஜாராம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us