/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் குழாயில் புழு அதிகாரிகள் ஆய்வு
/
குடிநீர் குழாயில் புழு அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 28, 2024 04:48 AM
காரைக்கால் : காரைக்காலில் குடிநீர் குழாயில் புழு காணப்பட்டதால் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சரிசெய்தனர்.
காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம் கோவில்பத்து, பிள்ளை தெரு வாசல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் கடந்த சிலநாட்களாக குடிநீரில் பழுப்பு நிறம் மற்றும் புழுக்கள் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். மேலும் இச்சம்வம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதால் நேற்று நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளை கொண்ட குழுவினர் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின் தண்ணீர் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.

