ADDED : ஏப் 19, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; புதுச்சேரி இருதய ஆண்டவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.
புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் புனிதவெள்ளியை முன்னிட்டு, திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.
நிகழ்ச்சியில், அருட் தந்தை பிச்சமுத்து, உதவி பங்குத் தந்தை ஜியோ பிரான்சிஸ் சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.

