
புதுச்சேரி: லலிதாம்பிகை தேவசிவாகம் டிரஸ்ட் சார்பில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் 30வது ஆண்டு ஆராதனை விழா நடந்தது.
புதுச்சேரி - திண்டிவனம், மொரட்டாண்டி டோல்கேட் அருகே விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவில், தட்சணாமூர்த்தி 18 சித்தர் மகா மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, வச்சலா சிதம்பர குருக்கள் தலைமை தாங்கினார்.
வேத விற்பன்னர், பாடசாலை ஆசிரியர் கீதா சங்கர குருக்கள், கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் சிலையை திறந்து வைத்தார்.
பின், கீதாராம சாஸ்திரிகள், மொரட்டாண்டி பிரத்திங்கரா காளி கோவில் நிறுவனர் ஜனார்த்தன சுவாமிகள் ஆகியோர் தலைமையில் மருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் நடந்தது.
கீதாராம குருக்கள், சித்தார்த், தலைவர் சீனிவாசன், கல்யாணம், வேதராமன், நாகராஜன், சுவாமிநாதன், முரளி ராஜகோபால், ஆனந்த பத்மநாபன், சீத்தாராமன், ரகோத்தமன், ரவி ஆகியோர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உருவ சிலைக்கு மலர் அஞ்சலி, புஷ்ப வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, சாம வேத பாராயணம், குரு ஆராதனை, பந்துமித்ர போஜனம் நடந்தது.