/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கு நாளை எழுத்து தேர்வு
/
கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கு நாளை எழுத்து தேர்வு
கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கு நாளை எழுத்து தேர்வு
கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கு நாளை எழுத்து தேர்வு
ADDED : டிச 14, 2024 03:35 AM
புதுச்சேரி: கூட்டுறவு துறையின் இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை(15ம் தேதி) நடக்கிறது.
இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா வெளியிட்டுள்ள செய்தி:
புதுச்சேரி கூட்டுறவு துறையில் இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை (15ம் தேதி) புதுச்சேரியில் 15 தேர்வு மையங்களிலும், காரைக்காலில் 2 மையங்களிலும், மாகே மற்றும் ஏனாம் தலா ஒரு மையங்களிலும் நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடக்கும் தேர்வில், 6,542 பேர் தேர்வு எழுத உள்ளனர். விண்ணப்பதாரர்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிட தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
நுழைவு சீட்டில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பம் இட்டு எடுத்து வரவேண்டும். நுழைவுச் சீட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வருமான வரி பான் கார்டு இவற்றுள் ஏதாவது ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
தேர்வர்களின் விரல்ரேகை பதிவு செய்யப்பட்ட பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். எனவே, தேர்வர்கள் உரிய நேரத்திற்கு முன்னரே தேர்வு மையத்திற்கு வரவேண்டும். தேர்வு மையத்தின் நுழைவு வாயில் சரியாக காலை 9:30 மணிக்கு மூடப்படும். அதற்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வர்கள் கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா, நுழைவுச் சீட்டு மற்றும் அசல் அடையாள அட்டை மட்டுமே கொண்டு வரவேண்டும். கைப்பைகள், மொபைல், புளூ டூத் சாதனங்கள், ஹெட் போன்கள், கால்குலேட்டர்கள், பென் டிரைவ் போன்ற இதர எலக்டரானிக் சாதனங்களை கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. மொபைல், இன்டர் நெட் சேவைகளை தடுப்பதற்கான ஜாமர் கருவிகளும், அனைத்து தேர்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும்.
நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. தேர்வின் போது எந்த விதமான முறையற்ற வழிகளை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், வழக்குப் பதிவு மற்றும் எதிர்கால தேர்வுகளில் தடை உட்பட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக நேரத்தில் 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் இன்று(14ம் தேதி) வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.