/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து அலுவலர்கள் பணிக்கு எழுத்து தேர்வு
/
போக்குவரத்து அலுவலர்கள் பணிக்கு எழுத்து தேர்வு
ADDED : மார் 17, 2025 02:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி, போக்குவரத்துத் துறையில் இளநிலை பொறியாளர், துணை மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான எழுத்து தேர்வு, பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது.
தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு, அனுமதி சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது. பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முதல் தாள் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரையிலும், இரண்டாம் தாள் மதியம் 2:30 மணி முதல் 4:30 மணி வரையிலும் நடந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 284 பேரில் 24௨ பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா, சிறப்பு பார்வையாளர் சுந்தரேசன், துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜெய்சங்கர் கண்ணன் ஆகியோர் தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முறைகேடுகளை தடுக்க மொபைல், இன்டர்நெட் சேவைகளை தடுப்பதற்கான ஜாமர் கருவிகளும், அனைத்து தேர்வு அறைகளில் சி.சி.டி.வி., கேமராவும் பொருத்தப்பட்டிருந்தன. தேர்வு மையங்களுக்கு முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தாமதமாக வந்த இளைஞரால் பரபரப்பு
தேர்வு மையத்தின் நுழைவு வாயில் காலை 9:30 மணிக்கு மூடப்பட்டு, அதற்கு பின் வந்த தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்போது, 15 நிமிடம் தாமதமாக வந்த இளைஞர் ஒருவர் தன்னை அனுமதிக்காததால், கல்லுாரி நுழைவு வாயிலில் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.