/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராம உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு
/
கிராம உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு
ADDED : செப் 03, 2025 01:56 AM
புதுச்சேரி : காலியாக உள்ள கிராம உதவியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வரும் அக்.12ம் தேதி நடக்கிறது.
இது குறித்து அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் மற்றும் பல் நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வரும் அக்டோபர் 12ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கான அனுமதி சீட்டு பதிவிறக்கம் மற்றும் தேர்வு மையங்கள் பற்றிய விபரங்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விபரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இணையதளத்தை அவ்வப்போது பார்வையிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.