/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளநிலை பொறியாளர் இடங்களுக்கு எழுத்து தேர்வு
/
இளநிலை பொறியாளர் இடங்களுக்கு எழுத்து தேர்வு
ADDED : அக் 15, 2024 06:28 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இளைநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 27ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை பெறப்பட்டன. இதற்கான எழுத்து தேர்வு வரும் 27ம் தேதி நடக்கிறது. முதல் தாள் அன்று காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும், 2ம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடக்கிறது.
இதற்கான நுழைவுச்சீட்டு விரைவில் துறையின் இணைய தளத்தில் வெளியிடப்படும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

