
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் 53ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.
மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் நிர்வாகிகள் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை, 100 அடி சாலை எல்லை பிள்ளை சாவடியில் உள்ள ஜெ., சிலைக்கும் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். லெனின் வீதி மாநில அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய ஓம்சக்திசேகர் பேசுகையில், 'விரைவில் உண்மை விசுவாசிகள் தொண்டர்கள் எண்ணம் ஈடேற உள்ளது. எதிர்காலம் அ.தி.மு.க., வுக்கு மட்டுமே என, குறிப்பிட்டார்.
மாநில நிர்வாகிகள் மாசிலா குப்புசாமி, முருகதாஸ், மகேஸ்வரி, கோவிந்தம்மாள், மலைசெல்வராஜ், சதாசிவம், விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.