/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மஞ்சள் ஒட்டு பொறி செயல்விளக்க நிகழ்ச்சி
/
மஞ்சள் ஒட்டு பொறி செயல்விளக்க நிகழ்ச்சி
ADDED : டிச 31, 2024 06:10 AM

நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் மஞ்சள் ஒட்டு பொறி குறித்து செயல்விளக்கம் நடந்தது.
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் நந்தினி, நிரஞ்சனா, சுவேதா, பிரவினா, பிரித்தி, பிரியதர்ஷினி, நந்தினி, சுவேதா, சினேகா, சுபா, வீனா ஆகியோர் பண்டசோழநல்லுாரில் தங்கி அப்பகுதியில் ஊரக தோட்டக்கலை பணி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பண்டசோழநல்லுார் கிராமத்தில் உள்ள விவசாயி பெரியசாமி காய்கறி தோட்டத்தில் மஞ்சள் ஒட்டுபொறியின் செயல் முறை விளக்கம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கினர்.
மஞ்சள் ஒட்டும் பொறியின் மூலம் சாறும் உறுஞ்சும் பூச்சிகள், பனி பூச்சிகள், இலை புழுக்கள், அசுவினி பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த மஞ்சள் ஒட்டு முறை நச்சுதன்மை அற்ற பூச்சிக் கட்டுப்பாட்டு முறையாகும். நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.