/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கர்ப்பம் கலைக்கும் மஞ்சள் கோடுகள்
/
கர்ப்பம் கலைக்கும் மஞ்சள் கோடுகள்
ADDED : நவ 24, 2024 04:50 AM
முதல்வர் அதிரடியால் உடனடியாக அகற்றம்
புதுச்சேரி இந்திரா சிக்னலில் இருந்து கோரிமேடு வரையிலான சாலை, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையின் கீழ் வருகிறது. இதனை மொரட்டாண்டி டோல் நிர்வாகம் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) பராமரிக்கிறது.
இந்திரா சிக்னல் முதல் கோரிமேடு வரையிலான சாலையில், ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர், சுப்பையா நகர் சந்திப்பு, போலீஸ் மைதானம், ஜிப்மர் மருத்துவமனை, மகாத்மா காந்தி பல் மருத்துவமனை உட்பட 7 இடங்களில் சாலைகள் குறுக்கிடுகிறது.
சாலை குறுக்கிடும் பகுதிகளில் வாகன விபத்தை தடுக்க, சாலை பாதுகாப்பு விதிமுறைகள்படி வாகன வேகத்தை கட்டுப்படுத்த, ஒவ்வொரு சாலை குறுக்கிடும் பகுதிக்கு முன்னதாக 4 இடங்களில் 6 மஞ்சள் நிற பட்டை கோடுகள் போடப்பட்டிருந்தது. மொத்தமாக இந்திரா சிக்னலில் இருந்து கோரிமேடு வரை மொத்தம் 336 கோடுகள் போடப்பட்டிருந்தது.
கோரிமேடு நோக்கி செல்லும் வாகனங்களில் 50 சதவீதம் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ், நோயாளிகள் வாகனங்கள், சாலை விபத்தை தடுக்க அமைக்கப்பட்ட எச்சரிக்கை கோடுகள், விபத்துக்களையும் பல்வேறு உபாதைகளையும் உருவாக்க துவங்கியது. கோடுகளால் பைக், கார், ஆம்புலன்ஸ் வாகனங்கள் துள்ளி குதிக்கிறது. மருத்துவமனைக்கு சென்ற சிலருக்கு கர்ப்பம் கலைந்து விட்டதாக முறையிட்டனர்.
இதனை கேட்ட முதல்வர் ரங்கசாமி, உடனடியாக சாலையில் அமைக்கப்பட்ட மஞ்சள் நிற கோடுகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி புதுச்சேரி பொதுப்பணித்துறையினர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கோடுகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் மஞ்சள் கோடு அகற்றியது தொடர்பாக புதுச்சேரி பொதுப்பணித்துறை மீது நகாய் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

