ADDED : ஜன 02, 2024 05:57 AM

புதுச்சேரி : ஹார்ட்புல்னஸ் தியான மையத்தில் யோகா மகோற்சவம் நிறைவு விழா நடந்தது.
புதுச்சேரி கம்பன் நகரில் உள்ள ஹார்ட்புல்னஸ் யோகா மற்றும் தியான மையத்தில் கடந்த 23ம் தேதி யோகா மகோற்சவம் துவங்கியது. இதன் நிறைவு விழாவிற்கு சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி வினேந்திரன், சைனிக் நலத்துறை இயக்குனர் மகாதேவன், மாநில எஸ்.எஸ்.எஸ்., அதிகாரி சதீஷ்குமார், ஓய்வு பெற்ற சைனிக் நலத்துறை கண்காணிப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் டாக்டர் பிரகன்குமார் தியான பயிற்சி அளித்தார்.
மையத்தின் செயல்பாடு குறித்து ராஜேந்திரன் விளக்கவுரையாற்றினார். முன்னதாக மண்டல ஒருங்கிணைப்பாளர் சித்தானந்தம் வரவேற்றார்.
பயிற்றுனர்கள் பெரியாண்டி, ராஜசேகர், சக்தி, சுதாகர், ஹரிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரி ஹார்ட்புல்னஸ் மையத்தில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8:00 மணி வரை இலவசமாக தியான பயிற்சி அளிக்கப்படுகிறது.
மைய ஒருங்கிணைப்பாளர் பத்மபிரியா நன்றி கூறினார்.

