/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணினி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
/
கணினி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 16, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் ராகினி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
வில்லியனுார், கிருமாம்பாக்கம் ஆகிய இடங்களில் , கணினி பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது.
கணினி பயிற்சிக்கான சேர்க்கைக்கு, புதுச்சேரியை சேர்ந்த, பிற்படுத்தப்பட்டடோர் மற்றும் சிறுபான்மையின ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவிகளிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வரும் 31ம் தேதி வரை, இந்த பயிற்சி மையத்தில் நேரடி சேர்க்கை நடக்கிறது. இது தொடர்பாக, வில்லியனுார் , 0413 - 2666767, கிருமாம்பாக்கம், 0413 - 2611776 ஆகிய கணினி பயிற்சி மையங்களை தொடர்பு கொள்ளவும்.