/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க விண்ணப்பிக்கலாம்
/
வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க விண்ணப்பிக்கலாம்
வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க விண்ணப்பிக்கலாம்
வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 25, 2025 05:28 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள் வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க செப்., 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்லாம்.
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை பயிற்சி வழி தொடர்புத் திட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் செழியன்பாபு செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் (பயிற்சி வழி தொடர்பு திட்டம்) அலுவலகம் சார்பில், வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள் வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க, பொதுப் பிரிவினருக்கான 65 சதவீத மானியம், அட்டவணை பிரிவினருக்கு 100 சதவீத மானியம் வீதம் வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும், விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்களுக்கு ரூ.75 ஆயிரத்திற்கு மிகாமலும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம். அல்லது (https://agri.py.gov.in/news.html) இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விரிவான திட்ட அறிக்கைகளுடன் வரும் செப்.30ம் தேதிக்குள் உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியகத்தில் சமர்ப்பிக்கவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.