/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பிளாஸ்டிக்கை தவிர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்'
/
'பிளாஸ்டிக்கை தவிர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்'
'பிளாஸ்டிக்கை தவிர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்'
'பிளாஸ்டிக்கை தவிர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்'
ADDED : ஆக 14, 2025 01:15 AM

பாகூர் : பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாத்திட முடியும் என, மாசு காட்டுபாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசினார்.
சேலியமேடு அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் திருநாராயணன் தலைமை தாங்கினார். ஆசிரியை இந்துமதி வரவேற்றார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் பங்கேற்று, பேசுகையில் 'ஜப்பானில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 85 வயதாகும். காரணம் அங்கு,70 சதவீத மரங்கள் உள்ளதால், காற்றில் 22 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது. மக்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.
அதுபோல், இங்கு 33 சதவீதம் மரங்கள் இருக்க வேண்டும். ஆனால், அதை விட குறைவாக உள்ளது.
நாம் மரக்கன்றுகளை நட்டு பாராமரித்திட வேண்டும்.ஆக்சிஜனை கொடுப்பது மரங்கள் மட்டும் தான். மரங்கள் தான் இயற்கை தந்த வரம்.
கடல் நமக்கு மிக அருகாமையில் உள்ளதால், நிலத்தடி நீரை எந்த அளவிற்கு வீணாக்குகிறோமோ அந்த அளவிற்கு, கடல் நீர் உட்புகுந்து விடும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்கள் வாங்குவதால், அதில் உள்ள ரசாயணம் உணவு பொருளில் கலந்து நஞ்சாகிவிடும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாத்திட முடியும்.
இது குறித்து மாணவர்களாகிய நீங்கள் கடைபிடிப்பது மட்டுமின்றி உங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் எடுத்து கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்' என்றார்.
அவர், பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். ஆசிரியர்கள் கிருஷ்ணகுமார், சசிக்கலாவதி உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ராஜசேகர் நன்றி கூறினார்.