தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ‘நீட்’ மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்

‘நீட்’ மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்

‘நீட்’ மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 06, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கலை, அறிவியல் படிப்புகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.

நீட் மதிப் பெண் அல்லாத தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கைக்கு புதிய விண்ணப்ப வரவேற்பு பதிவை மீண்டும் சென்டாக் துவங்கியுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் துணைத் தேர்வு  எழுதிய மாணவர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள புதிய மாணவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் இந்த சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை 8ம் தேதி மாலை 5:00 மணி வரை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் நேரத்தில் பாடப்பிரிவு முன்னுரிமைகளை தேர்வு செய்யும் வசதி தற்போதைக்கு செயலில் இருக்காது. பாடப்பிரிவு முன்னுரிமைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதால், மாணவர்கள் சென்டாக் இணையதளத்தைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, மாணவர்கள் www.centacpuducherry.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். சந்தேகங்கள் மற்றும் குறைகள் இருந்தால், மாணவர்கள் தங்களது லாகின் டேஷ்போர்டில் உள்ள கிரீவன்ஸ் பகுதி மூலமாகத் தெரிவிக்கலாம். அல்லது 0413 - 2655570, 2655571 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us