ADDED : செப் 06, 2026 09:02 PM
புதுச்சேரி: ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுக்குழு கூட்டம், முதலியார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மாநில துணைத் தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் அந்தோணி நடைபெற்ற வேலைகள், இணைப்பு சங்கங்களின் மாநாடுகள், பேரவைகள், உறுப்பினர் சந்தா, 21வது மாநில மாநாடு குறித்து பேசினார்.
மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தேசிய குழு முடிவுகள், மாநில மாநாடு அமைப்பு நிலை குறித்து பேசினார். கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் அபிஷேகம், மாநில துணைத் தலைவர் சேகர், மோதிலால், மாநில செயலாளர்கள் தயாளன், ஹேமலதா, மூர்த்தி, முத்துராமன், நிர்வாகிகள் விஸ்வநாதன் கண்ணன், எரிக் ரம்போ, ஏழுமலை, பாலன், டோனி, மணி, மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., புதுச்சேரி மாநில 21வது மாநாட்டினை வரும் 23ம் தேதி காமராஜர் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் நடத்துவது. மாநாட்டில் ஏ.ஐ.டி.யூ.சி., அகில இந்திய துணைத் தலைவர் சுப்புராயன் எம்.பி., கலந்து கொண்டு பேசினார். நிர்வாகி மலர்விழி நன்றி கூறினார்.
