ADDED : நவ 17, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் சாலை, தவளக்குப்பம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு இன்று (நவ.,17) தகவல் வந்தது.
போலீசார் அங்கு விரைந்து சென்றுல அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். பெரியக்காட்டுபாளையம் ராகுல்ஷான்,22; என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
அவரை, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
