தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது

பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது

பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர் கைது


ADDED : செப் 12, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் பெண்ணை  மானபங்கம் செய்த வாலிபரை போலீசார்  கைது செய்தனர்.

புதுச்சேரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை, சோலை நகரை சேர்ந்த மணி (எ) டீயோ மணி என்பவர் பின் தொடர்ந்து வந்துள்ளார். இதுகுறித்து அப்பெண், அவரது கணவரிடம் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பெண் வெளியே சென்று ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார். அப் போது, அங்கு சென்ற மணி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றார்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடியதால், அப்பெண்ணிற்கு மிரட்டல் விடுத்து, அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார்  வழக்குப்பதிந்து மணியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us