ADDED : செப் 12, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஓய்வு பெற்ற பேராசிரியர் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சம் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புருேஷாத்தம்மன், 65; ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர் குருமாம்பேட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அவரது வங்கி கணக்கில் இருந்து, 4 தவணை களாக ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் அவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர் லாஸ்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
