UPDATED : அக் 07, 2026 01:41 AM
ADDED : அக் 07, 2026 01:36 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முதன்முறையாக ஓட்டளிக்கும் தகுதி பெற்ற இளம் வாக்காளர்கள், இடைத்தேர்தல் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்கும் பெருமிதத்தோடு காலை முதலே புன்னகையோடு ஓட்டுச்சாவடிகளை நோக்கி வந்தனர்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தங்களது முதல் ஓட்டை பதிவு செய்துவிட்டு வெளியே வந்த இளைஞர்கள், விரலில் வைக்கப்பட்ட அழியாத மையை காட்டி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஓட்டளிப்பது நம் உரிமை மட்டுமல்ல; மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தலையாயக் கடமை என்ற விழிப்புணர்வு வாசகங்களோடு, அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
இளம் தலைமுறையினரின் பங்கேற்பு ஏனைய வாக்காளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது.
