ADDED : ஆக 17, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: விழுப்புரம் மாவட்டம், எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் அறிவழகன், 28; சாராயக் கடைமேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேவி, 30; மகள் திவிஷா, 7; மகன் தியான்,5, உள்ளனர்.
நேற்று காலை அறிவழகன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பைக்கில் அழைத்து கொண்டு, அரியாங்குப்பம் கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி - கடலுார் சாலை இடையார்பாளையம் சென்ற போது, பின்னால், வந்த அரசு பஸ் பைக் மீது மோதிய தில், தேவி, பஸ் டயரில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர், இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.