/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உங்களுடைய பதவிக் காலம் ஜனநாயகத்திற்கு ஒரு பொற்காலமாக அமையும்: கவர்னர் பாராட்டு துணை ஜனாதிபதி கவர்னர் கைலாஷ்நாதன்பாராட்டு

ADDED : டிச 30, 2025 04:20 AM
புதுச்சேரி: துணை ஜனாதிபதியின் பதவி காலம் இந்திய ஜனநாயகத்திற்கு பொற்காலமாக அமையும் என கவர்னர் கைலாஷ்நாதன் பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று நடந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி அரசு சார்பில் பொது வரவேற்பு விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:
துணை ஜனாதிபதி பதவி என்பது ஒரு பதவி மட்டுமல்ல. அது ஒரு நம்பிக்கையின் சின்னம். ஜனநாயகத்தின் சமநிலைப் புள்ளி. அந்த அரசியல் கண்ணியத்தின் காவலராக துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் .
நீங்கள் அலங்கரித்த பதவியில், பொறுப்பில் உங்களை தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை என்னுடைய பெருமையாக நினைக்கிறேன். டாலர் சிட்டியான திருப்பூரில் பிறந்து இருந்தாலும்- முழு வாழ்க்கையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்து உள்ளீர்கள். இளமைக் காலத்தில் இருந்து, ஜனநாயகத்தின் ஒரு போர் வீரனாக போராடினீர்கள். உங்களுடைய தலைமைப் பண்பு எல்லாருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.
அரசாங்கத்தில் எந்த பொறுப்பு கிடைத்தாலும் அதில் சிறப்பாக செயல்படுவீர்கள் என பிரதமர் சொன்னது சாதாரண வார்த்தைகள் அல்ல. அது இந்திய ஜனநாயம் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இன்றைய புதுச்சேரி, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. இந்த வளர்ச்சிப் பயணத்தில் மத்திய அரசின் ஆதரவும், மாநில அரசின் முயற்சியும், நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் ஒரே திசையில் செயல்படுகிறது.
புதுச்சேரி மண், உங்களை மீண்டும் வரவேற்கிறது. உங்களுடைய பதவிக் காலம் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு பொற்காலமாக அமையும்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.