ADDED : ஆக 26, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம், ஆக. 27–
முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நல்லவாடு, சுனாமி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி பொன்மொழி, 38. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரகின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி ரகின், பொன்மொழியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த பொன்மொழி, தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ராகினை, 28; நேற்று கைது செய்தனர்.
