/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நண்பரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபருக்கு வலை
/
நண்பரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபருக்கு வலை
ADDED : ஜன 16, 2026 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மது போதையில் நண்பரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.
வாணரப்பேட், முனுசாமி நகரை சேர்ந்தவர் ஏழுமலை மகன் பிரகாஷ், 35; டிரைவர். இவர், தனது நண்பரான பூமியான்பேட்டை சேர்ந்த பெருமாள் மகன் தக்காளி (எ) தமிழ்மணி, 34; என்பவருடன் உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை மது அருந்தினார்.
அப்போது, மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தமிழ்மணி, பிரகாஷை தகாத வார்த்தையால் திட்டி, பீர் பாட்டிலால் தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

