/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டின் பின் பக்க சுவற்றை உடைத்து நகை, பணம் திருடிய வாலிபர் கைது
/
வீட்டின் பின் பக்க சுவற்றை உடைத்து நகை, பணம் திருடிய வாலிபர் கைது
வீட்டின் பின் பக்க சுவற்றை உடைத்து நகை, பணம் திருடிய வாலிபர் கைது
வீட்டின் பின் பக்க சுவற்றை உடைத்து நகை, பணம் திருடிய வாலிபர் கைது
ADDED : ஏப் 15, 2025 04:35 AM

திருபுவனை: திருபுவனை அருகே வீட்டில் பின்பக்க சுவற்றை உடைத்து உள்ளே புகுந்து
ரூ.2.25 லட்சம் நகை ,பணத்தை திருடிய பண்ருட்டி நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் திரவுபதையம்மன் கோயில் எதிரே உள்ள கிழக்கு மணவெளி வீதியை சேர்ந்தவர் ஹரிராமன், இவரது மனைவி அருள்மொழி 41; கடந்த 7ம் தேதி காலை அருள்மொழி வழக்கம்போல் வேலைக்குச் சென்றிருந்தார். பள்ளிக்கு சென்று திரும்பிய அருள்மொழியின் பிள்ளைகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது , வீட்டின் பின் பக்க சுவற்றை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.2.25 லட்சம் மதிப்புடைய நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருபுவனை இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் திருட்டு குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சந்தேக நபரின் புகைப்படங்களை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதகடிப்பட்டில் உள்ள மதுகடை அருகே ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பண்ருட்டி அருகே உள்ள சோலைகவுண்டர்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பராயன் மகன் சுந்தரவேலு 24; என்பதும், அருள்மொழி வீட்டின் சுவரை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து சுந்தரவேலுவை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து இரண்டே முக்கால் சவரன் நகை, 170 கிராம் வெள்ளிக்கொலுசு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சுந்தரவேலு மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது