/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு புகுந்து தாக்கிய வாலிபருக்கு வலை
/
வீடு புகுந்து தாக்கிய வாலிபருக்கு வலை
ADDED : ஜன 17, 2026 05:14 AM
புதுச்சேரி: தவளக்குப்பத்தில், வீடு புகுந்து தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இடையார்பாளையம், என்.ஆர்., நகரை சேர்ந்தவர் மச்சகாந்தி, 67. இவரது பேரன் ரிஷி, 24. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகையன் மகன் சக்திவேல், 25, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 13ம் தேதி ரிஷியின் வீட்டிற்கு தனது நண்பர்களுடன் வந்த சக்திவேல், மச்சகாந்தியிடம் ரிஷியை கேட்டு, கத்தியை காட்டி மிரட்டினர். அவரை, திட்டி, வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து சேதப்படுத்தினார். சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கடேசன், 41, என்பவரை சக்திவேல் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து சக்திவேலை தேடி வருகின்றனர்.

