ADDED : நவ 30, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குடிபோதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு, சிறப்பு பொருளாதார மண்டலம் அருகே வாலிபர் ஒருவர், குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், சேதராப்பட்டு உதவி சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்த சூர்யா, 36; என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, சூர்யாவை கைது செய்தனர்.