ADDED : ஏப் 14, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:' கடற்கரை சாலையில், நின்று கொண்டு பொதுமக்களிடம் தகராறு செயத வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி கடற்கரை சாலை, பழைய நீதிமன்றம் அருகே நேற்று முன்தினம் இரவுவாலிபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
ரோந்து பணியில் ஈடுப்பட்ட ஓதியஞ்சாலை போலீசார் அந்த வாலிபரை பிடித்து, விசாரணை செய்தனர். அவர் வேலுாரை சேர்ந்த நியாஸ்பாபு, 28, என்பது தெரியவந்தது.
போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.