/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது
/
பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது
ADDED : அக் 27, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பாகூர் - கன்னியக்கோவில் சாலை தனியார் ஆக்சிஜன் கம்பெனி அருகே ஒரு நபர் நின்று கொண்டு, அவ்வழியாக சென்ற பொது மக்களை ஆபாசமாக திட்டிய படி, அநாகரிகமாக நடந்து கொண்டார். போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடலுார் பழைய வண்டிபாளையம் அடுத்த கரையேறவிட்டகுப்பம் பகுதியை சேர்ந்த ரமணன் 24; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

