ADDED : செப் 26, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
திருபுவனை: மதகடிப்பட்டு கடை வீதியில் மதுபோதையில் ரகளை செய்த விழுப்புரத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை போலீஸ் ஏ.எஸ்.ஐ., முருகையன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மதகடிப்பட்டு கடை வீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 90 கிட்ஸ் ஓட்டல் எதிரே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூராக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த கண்ணன் மகன் குபேரன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
