/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவிகள் கடத்தல் 'போக்சோ'வில் வாலிபர் கைது
/
பள்ளி மாணவிகள் கடத்தல் 'போக்சோ'வில் வாலிபர் கைது
ADDED : நவ 08, 2025 01:46 AM
புதுச்சேரி: பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீது போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் தங்களுடன் படிக்கும் தோழிக்கு பிறந்த நாள் விழாவுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு நேற்று முன்தினம் சென்றனர்.
இருவரும் வெகு நேராமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் கடத்தல் வழக்குப் பதிந்து, விசாரித்தனர்.
இதற்கிடையே தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்த சலாம், 22, என்பவர் பள்ளி மாணவிகளை கடத்திச்சென்று, பெரிய முதலியார்சாவடியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்திருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவிகளை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமைனக்கு அனுப்பி வைத்தனர். பின் சலாமை கைது செய்து விசாரித்ததில், மாணவிகள் 2 பேரில் ஒருவரை சலாம் காதலிப்பதாக கூறி, கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சலாமை கைது செய்தனர்.

