ADDED : ஜன 13, 2026 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் பீச்சில், மது போதையில் நின்று அவதுாறாக பேசிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
வீராம்பட்டினம் ரூபி பீச்சில், வாலிபர், மது போதையில், நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அவதுாறாக பேசுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, உதவி சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார், அங்கு சென்று வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், மணவெளி கட்டபொம்மன் நகரை சேர்ந்த ஆகாஷ், 25; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

