நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் ரேஷன் கடையில், தொகுதி எம்.எல்.ஏ.,வும், துணை சபாநாயகருமான ராஜவேலு ரேஷன் கார்டுகளுக்கு 2 கிலோ இலவச கோதுமை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மணமேடு, கரையாம்புத்துார், பனையடிக்குப்பம், நெட்டப்பாக்கம், மடுகரை, ஏரிப்பாக்கம், நத்தமேடு, சூரமங்கலம், மொளப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கோதுமை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

