/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.ஐ., உடல் தகுதி தேர்வு வரும் 19ம் தேதி துவக்கம்
/
எஸ்.ஐ., உடல் தகுதி தேர்வு வரும் 19ம் தேதி துவக்கம்
எஸ்.ஐ., உடல் தகுதி தேர்வு வரும் 19ம் தேதி துவக்கம்
எஸ்.ஐ., உடல் தகுதி தேர்வு வரும் 19ம் தேதி துவக்கம்
ADDED : ஜன 13, 2026 06:38 AM
புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வு வரும் 19ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து போலீஸ் துறையின் சிறப்பு அதிகாரி ஏழுமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் மொத்தம் 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு வரும் பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
அதனையொட்டி, இவர்களுக்கான உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வு வரும் 19ம் தேதி முதல் பிப்ரவரி 7 ம் தேதிவரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து) கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
தேர்வர்களுக்கான அனுமதி அட்டை நேற்று 12ம் தேதி முதல் recruitment.py.gov.in என்ற அரசு ஆட்சேர்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்விற்கு வரும் போது அரசு அசல் அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

