ADDED : மார் 24, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தமிழக பகுதியான பராங்கிணி பகுதியைச் சேர்ந்த பிரவீன், 27, என்பவர் மது போதையில், லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை பின்புறம் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது, வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
