/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவி பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
/
மாணவி பலாத்காரம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
ADDED : மார் 05, 2026 04:01 AM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அருகே கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் காலனியைச் சேர்ந்தவர் கிரிஸ்வின், 20. இவர், அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவருடன்கல்லுாரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இதற்கிடையில் அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இத்தகவல் பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வந்தது. இது குறித்து பெண்ணின் பெற்றோர்கள் நெட்டப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில், நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கிரிஸ்வினை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

