/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் மானபங்கம் கஞ்சா வாலிபர் கைது
/
பெண் மானபங்கம் கஞ்சா வாலிபர் கைது
ADDED : ஆக 02, 2025 06:53 AM
புதுச்சேரி: திலாசுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 43 வயது பெண். இவர், நேற்று முன்தினம் மதியம், டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில் நிலையத்திற்கு வந்தார். டிக்கெட் புக்செய்து விட்டு, சுப்பையா சாலை வழியாக துாய இருதய ஆண்டவர் பள்ளி எதிரே நடந்து சென்றார்.
அப்போது எதிரே நடந்து வந்த 3 பேரில் ஒருவர், திடீரென அந்த பெண்ணிடம் அத்துமீறி தகாத செயலில் ஈடுபட்டு, அவரை மானபங்கப்படுத்தினார். அப்பெண், சத்தம் போடவே அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர்.
பின், அதே சாலை வழியாக கணவருடன் அந்த பெண் வந்தபோது, மானபங்கம் செய்த நபர், அப்பகுதியில் அமர்ந்து இருந்தார். அவரை அந்த பெண், தனது கணவரிடம் அடையாளம் காட்டினார். உடனே அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து, ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தார் .
போலீசார் விசாரணையில், அவர், திருச்சியை சேர்ந்த கணேஷ், 31, என்பதும், அவர் கஞ்சா போதையில் இதுபோல் நடந்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.