ADDED : டிச 08, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது தொண்டமாநத்தம் அரசு பள்ளி அருகில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த கருணாமூர்த்தி மகன் ரமணா, 19, என்பதும், அவர் பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, ரமணாவை கைது செய்து, அவரிடம் இருந்த 60 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.